இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் - மைக் பெனிங் MP

லங்கை வாழ் முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனா அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை நிறுத்தும் நோக்கில் பிரித்தானியாவிலுள்ள ஹெமல் ஹெம்ப்‌ஸ்டட் பிரதேசத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் அப்பிரதேசத்து நாடாளுமன்ற உறுப்பினர் மைக் பெனிங் அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வினை SLMA HEMEL என்கின்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது, இந் நிகழ்வுக்கு அதன் தலைவர் கே.அஜ்வட் தலைமை தாங்கினார். இந் நிகழ்வுக்கு பல்வேறு பிரதேசத்தில் இருந்தும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

இந் நிகழ்வில் தர்கா டவுன் , பேருவளை, அளுத்கமை, துந்துவை வெயங்கள போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான ஒளிப்பதிவு காண்பிக்கப்பட்டதுடன் , பாதிக்கப்பட்ட மக்களுக்காக துஆ பிரார்த்தனையும் செய்யப்பட்டது. அத்துடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைக் பெனிங் அவர்களிடம் முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் மைக் பெனிங் உரையாற்றுகையில், இலங்கையில் இடம் பெற்ற இனவாத செயல் தன்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்துவதாகவும் , இவ்வாறான இனவாத செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் இந்த கொடூர செயலில் ஈடுபற்றவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து தண்டனை வழங்குவதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நடைபெறாமலிருக்க இலங்கை அரசு கவனம் செலுத்துதல் அவசியம் என்றும் மேலும் இலங்கை மக்களின் துக்கத்தில் தானும் பங்கு கொள்வதாகவும் இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக் பெனிங் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :