பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, எதுவித நேரடி அழைப்பையும் விடுக்காமல், 'அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சர் ரவூப் ஹகீம் ஆகியோர் மின்னல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார்களா? என்று சக்தி தொலைகாட்சியில் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பி வருகிறார். இவ்வாறு அவர் செயற்படுவதற்கு ஒரு தீய நோக்கம் இருக்க வேண்டும்
ஸ்ரீரங்கா, அண்மைக்காலமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மின்னல் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக காழ்ப்புணர்வை கக்கி வருகிறார். கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின்போது ஐ.ம.சு.கூ முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுவத்தைத் தடுத்து; அதை தனது கட்சிக்கு சார்பாக பயன்படுத்த முற்பட்டார்.
வன்னி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அ.இ.ம.கா இன் பலம்தான் ஐ.ம.சு.கூ இன் பலமாகும். அந்தவகையில் ஸ்ரீரங்காவின் சதித்திட்டத்தை முறியடித்து ஐ.ம.சு.கூ. வை முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளூராட்சி சபையின் ஆசனங்களையும் பெற்றார். அதே நேரம் ஸ்ரீரங்காவின் கட்சி பிரதேச சபை உறுப்பினர்களைக்கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது.
அன்று முதல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்மீது காழ்புணர்வு கொண்டு தன்னுடைய தொலைக்காட்சியின் மூலம் அமைச்சரின் அரசியல் பயணத்தை சிதைப்பதற்கு பகீரத முயற்சி செய்து வருகிறார். இருப்பினும், அமைச்சரின் அரசியல் பயணம் தொடர்ந்து வீரியம் பெற்று வருவதை சகிக்க முடியாமல், இம்முறை அழைப்பு விடுக்காமல் தனது நிகழ்ச்சிக்கு வருவாரா என்ற கேள்வியை தனது தொலைக்காட்சி மூலம் எழுப்பி கொண்டிருக்கிறார்.
திரு.ஸ்ரீரங்கா குறித்த தொலைகாட்சியில் தோன்றுகின்ற வரை விலாசமில்லாத ஒருவராக இருந்தார். சக்தி தொலைக்காட்சி அவருக்கோர் அடையாளத்தைக் கொடுத்தது. அந்த தொலைகாட்சியினுடாக மலையக மக்களுக்கு குரல் கொடுப்பவர் போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தினார். பிறகுஇ ஐ.தே.கவின் தயவில் நுவெரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி தனித்து இயங்குவதாக அறிவித்து இரண்டொரு வாரங்களுக்குள்ளேயே அவரது நன்றி கெட்ட தனத்தைக் காட்டினார்.
வெறும் தொலைக்காட்சியின் மூலம்; தான் பெரும் அரசியல் தலைவராக மாறலாம் என்ற நப்பாசையில் ஒரு கட்சியின் செயலாளர் நாயகம் ஆகினார். அதனைத் தொடர்ந்து குறித்த தொலைகாட்சியின் உதவியுடன் வட மாகாணத்தை தனது கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என நினைத்துஇ முல்லைதீவு மாவட்டத்தில் முன்னர் குறிப்பிட்டது போன்று உள்ளூராட்சி சபை தேர்தலில் களமிறங்கி மூக்குடைந்து போனார்.
தான் நடத்தும் மின்னல் நிகழ்ச்சியில் யாரையாவது அழைத்து விட்டு, தானே முக்கால்வாசி நேரம் பேசுவார். அதில் மற்றைய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் எதுவும் மக்களுக்கு செய்வதில்லை என சாடுவார். அதேநேரம், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவர் செய்யு்ம் பெரும் சேவை நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொஞ்சம் அப்பியாச புத்தகங்களை வழங்கி அதனை சக்தி தொலைகாட்சியில் காட்டுவார். போதாக் குறைக்கு ஒரு சிலரைப்பிடித்து இந்த அப்பியாசப்புத்தக கொடுத்ததைப்போன்ற ஒரு மாபெரும் தேவையை வேறெந்த அரசியல் வாதியும் செய்யவில்லை என்பதுபோல் பேட்டி கொடுக்க வைத்து அதனையும் அந்த தொலைகாட்சியில் காட்டுவார். தொலைகாட்சியில் முகத்தைக்காட்டுவதற்கு நான்கு பேரைத் தேடுவது பெரிய விடயம் அல்ல.
இவரது அரசியல் சேவை அங்கிருக்கும் கழிப்பறைகள் மற்றும் லயன்களை சுற்றிப் பார்பாதாகும். அதுவும் அந்த தொலைகாட்சியில் அவரது மாபெரும் மகோ உன்னத சேவையாக காட்டப்படும்.
பாளுமன்றத்தில் தமிழை சரியாக உச்சரிக்காமல், தமிழில் தட்டுத்தடுமாறி 4 வார்த்தை பேசினால் அதனை 40 தடவை அந்த தொலைக்காட்சியில் காட்டுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு வேண்டாதவர்கள் பாராளுமன்றத்தில் எவ்வளவு பேசினாலும் காட்ட மாட்டார்கள். நுவெரெலியா மாவட்டத்தில் தொண்டமான் போன்றவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து செய்யும் அபிவிருத்தியை தொட்டும் பேச மாட்டார்கள்.
எனவே ஸ்ரீ ரங்காவின் தனிப்பட்ட புராணம் பாடுகின்ற மின்னல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு மக்கள் முகம் சுழிக்கின்ற நிலையில், தற்போது பிரதான அரசியல்வாதிகள் யாரும் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை.
இவ்வாறு மக்களிடத்திலிருந்து தூரமாகிவிட்ட இந்த மின்னல் நிகழ்ச்சிக்கு அழையாமல் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வருவாரா என்று கேள்வி எழுப்பி அமைச்சரைப் பற்றி மக்களிடத்தில் ஒரு பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகின்ற அவரது குள்ளநரி வேலை மக்களிடம் எடுபடாது என்பதைத் தெரிவிப்பதோடு; இந்த சின்னத் தனமான மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொள்ள கூடாதென்றும் வேண்டுகிறோம்.

0 comments :
Post a Comment