தவிசாளர் அன்சில் தாக்கப்பட்டமைக்கு பாலமுனை அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் கண்டனம்

ண்மையில் பொதுபலசேனா இனவாதக் கும்பலால் அளுத்கம, பேருவள மற்றும் தர்காநகர் போன்ற பகுதிகளில் மிகவும் சமாதானமான முறையில் வசித்துவந்த முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்து, அட்டாளைச்சேனைப் பகுதிகளிலுள்ள சமூகம் மேற்கொண்ட அமைதியான ஊhர்வலத்தின்போது, பாதுகாப்புக் கடமைக்கென ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிரடிப்படையினர் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ எம்.ஏ.அன்சில் அவர்களைத் தாக்கியுள்ளமையை பாலமுனை அனைத்துப்பள்ளிவாசல்கள் மற்றும் சிவிலமைப்புக்களின் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்தோடு ஆழ்ந்த கவலையும் தெரிவிக்கின்றது.

உண்மையில் ஒரு சமூகத்தின் அங்கம் ஒரு பிரதேசத்தில் அநியாயமான முறையில் பாதிக்கப்படும் போது அல்லது தாக்கப்படும்போது அதற்கெதிராக அதன் அங்கத்தினர்கள் கொதித்தெழுவதும் தங்களது உணர்வுகளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் ஹர்த்தால்கள் மூலம் வெளிப்படுத்துவதும் ஒரு ஜனனாயக நாட்டில் இயல்பானதாகும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் பாதுகாப்பு படையினர் செயற்படுவதானது ஜீரணிக்க முடியாத கண்டனத்திற்குரிய விடயமாகும்.

அதுமாத்திரமன்றி, இந்த நாட்டிலுள்ள பாதுகாப்புத் துறையில் கடமை புரியும் அதிகாரிகள் சுமார் 97 வீதமானவர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர்களாக இருப்பதால், அவர்கள் இந்நாட்டில் சிறுபான்மை இனத்திற்கெதிரான கலவரங்கள் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நிதானமிழக்கின்ற நடுநிலை தவறுகின்ற நிலைமையை தொடர்ந்தேர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இவ்வாறான நிலைமைகளினால் ஏற்பட்டுள்ள விளைவாகவே அண்மைய முஸ்லிம்கள் மீதான தாக்குதலையும் அதனை தொடர்ந்த அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் மீதான தாக்குதலையும் 
நோக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்திலும் தொடருமாக இருந்தால், இந்நாட்டிலுள்ள சிறுபான்மை இனமானது நாட்டின் பாதுகாப்புத் துறையில் நம்பிக்கை இழப்பதுடன், அவர்களை அவர்களாகவே பாதுகாப்பதற்கான 
பொறிமுறைகளில் நாட்டங் கொள்வதனைத் தவிர்க்கவும் முடியாது போகலாம்.இந்த விடயத்தில் தவிசாளர் அன்சில் பொறுமையாகவும் சமயோசிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டதன் விளைவாக ஏற்படவிருந்த பல இழப்புக்களைத் தடுக்க நேரிட்டுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்ட அதிரடிப்படையினரின் மீது பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகள் 
பாதுகாப்புத் துறைசார் அதிகாரிகளினால் அநியாயமான முறையில் எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளின் மீதோ அல்லது பொதுமகன் மீதோ எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான நிலைமையை சம்பந்தப்பட்ட 
அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சம்மேளனம் வேண்டிக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :