அளுத்கம மற்றும் தர்காநகர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனையில் இருந்து நிவாரணம்



பைஷல் இஸ்மாயில்-

ளுத்கம மற்றும் தர்காநகர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று கொண்டு சென்று கையளித்தனர். 

இந்த நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீரவுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்  பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அத்துடன் இந் நிவாரணப்பொருட்களைச் சேகரிக்க முன்னின்று உதவிய அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், துணைத் தவிசாளார் ஏ.எல்.அமானுல்லா, உறுப்பினர்களான. ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், எஸ்.எல்.முனாஸ், மற்றும் அட்டாளைச்சேனை ஜும்ஆப்பெரிய பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிருவாகத்தினர், இவர்களுடன் இணைந்து செயல்பட்ட சகோதரர்கள், இளைஞர்கள், உதவிய தனவர்ந்தர்கள், சேனைத்தமிழ் உலா குழுவினர்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நன்றி கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :