கல்முனை மாநகரசபை பிரதி முதல்வர் நியமனம் விவகாரம்- மாநகரசபை உறுப்பினர் ஒருவர் இராஜினாமா

ல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் நியமன விவகாரம் இன்று ஒரு உறுப்பினரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.

மருதமுனையைப் பிரதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட சட்டத்தரணி றகீப் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தன இது சம்மந்தமாக இம்போட்மிரர் இணையத்தளம் தொடர்புகொள்ள முயற்சித்தபோது பலனளிக்கவில்லை.

தொடர்ந்து கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் அமீர் அவர்களை இம்போட்மிரர் தொடர்பு கொண்டபோது:
குறிப்பிட்டபிரதி முதல்வர்பதவி எனக்கு வழங்கப்படவேண்டியது அவசரமாகவும் இரகசியாமாகவும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எங்களுடன் தேர்தலில் போட்டியிட்டு ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ஒருவருக்கு கொடுத்திருப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது இது சம்மந்தமாக கட்சியின் தலைமைத்துவத்திடம் பேசுவதற்க்கு இருக்கிறோம் என்று பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :