அளுத்கம விவகாரத்தை முழு உலகுக்கும் காட்டி இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி.
அவர் ஒரு மதவாதி அவரை உடனடியாக அரசில் இருந்தும் நீதிஅமைச்சில் இருந்தும் விலக்குமாறு கண்டி அஸ்கிரிய சங்கங்களின் பிரதாண நிர்வாக சங்க மாதகமே தேரோ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்மைய சம்பவத்தை வைத்து அரசியல் இலாபமும் முழு உலகுக்கும் இலங்கையைப்பற்றிய தப்பாண அபிப்பிராயத்தையும் சரவதேச ஊடகங்கள் ஊடகா தெரிவித்தது வரும் ஹக்கீமை நீக்குமாறு தெரிவித்த செய்தி இன்று மவ்பிம சிங்களப் பத்திரிகையில் தலைப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இச் சம்பவம் பற்றி ஜக்கிய நாடுகள் மணித உரிமைக் கூட்டத்தில் ஜேர்மன், கணடா, அமேரிக்கா இலங்கைப் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று முன்தினம் வெளிநாட்டு அமைச்சரை இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் சவுதி அரேபியா தூதுவர் தலைமையில் சென்று அளுத்கம விவகாரம் இலங்கையில் முஸ்லீகளுக்கு இழைக்கும் அநீதிகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இதனை வெளிநாட்டு அமைச்சர் சிறுசம்பவங்களை தங்களுக்கு பெரிதுபடுத்தி அரசியல்வாதிகள் சொல்லியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment