பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிறுவனத்தின் பொதுச் செயலாளரும், விரிவுரையாளருமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஜே.எல். வஸீல் எழுதிய 'கல்விசார பிரச்சினைகள்'நூல் வெளியீடு நேற்று (22-06-2014) இரவு மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய நூலக மண்டபத்தில் நடைபெற்றது. செஸ்டோ ஸ்ரீலங்காவின் தலைவர் நாபி எம் முஸ்னி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எப்.எம்.அகமதுல்அன்சார் மௌலானா வரவேற்புரை நிகழ்த்தினார் நூலாசிரியர் பற்றியும், நூல்பற்றியும்; பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையூம் விஷேட உரையாற்றினார் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம.;அமீர் நூல் பற்றி விமர்சன உரையாற்றினார்.
நூலாசிரியர் வஸீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப் அவர்களுக்கு நூலின் முதல் பிரதியை வழங்கினார். முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் நஜீம், பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, அசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத். சிரேஷ்ட முகாமைத்தவ உதவியாளர் எஸ்.எம்.றபாயுதீன்.விரிவுரையாளர்களான ஏ.ஏ.நுபைல், எம்.எம்.பாஸீல் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊரின் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில கலந்து கொண்டனர்.
கல்விசார பிரச்சினைகள்'உரையாடல்களும் ஆலோசனைகளும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம் வானொலியில் ஒலிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment