புத்த மதத்தின் பெயரால் தனிப்பட்ட குழுவினர் ஏற்படுத்திய குழப்பம் எனக்கு மனவேதனையாக இருக்கிறது-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

லங்கையில் கடந்த வாரம் நடந்த வன்முறைகள், முஸ்லிம் எதிர்ப்பு மோதல்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

கவலை வெளியிட்டுள்ளார்.

புத்த மத்தின் பெயரால், தமது தனிப்பட்ட குறுகிய நோக்கங்ளுக்காக செயற்படும் குழப்பங்களை ஏற்பத்தும் அடிப்படைவாதிகள் சிலர் நடத்திய மக்களை தூண்டும் ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பன இந்த மோதல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாக கூறும் சந்திரிக்கா, நடைபெற்ற மோதல்கள் குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 18 மாதங்களாக பகையுணர்வை தூண்டி அசிங்கமான விதத்தில் வன்முறைகளை ஈடுபடுவோரை கட்டுப்படுத்த சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகள் தவறியமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எப்போதும் இல்லாத வகையில், இலங்கையில் வாழும் சகல இனங்களுக்கும் ஜனநாயகத்தின் மூலம் சரிசமமான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை வழங்குவதற்கு மாபெரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனவாத கலவரத்தை அடக்க அன்றிருந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், பெரும் எண்ணிகையிலான உயிர்களை காவு கொண்ட 25 வருடகால தொடர் யுத்தத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டது.

பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தோற்கடிக்க நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள், முப்படை, பொலிஸ் உட்பட பொது மக்களுக்கு தலைமை தாங்கியது. அந்த யுத்தத்தை முடிவு நோக்கி கொண்டு சென்று இன்றைய அரசாங்கம் மிக முக்கிய பணியை நிறைவேற்றியது.

இந்த நிலையில், இன மற்றும் மத பேதங்களை ஏற்படுத்தும் மோதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைவர்கள், நிறுவனங்கள், தனிநபர்கள் என அனைவரும் இன்றைய அரசாங்கத்தின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

மோதலில் ஈடுபட மக்களை தூண்டியவர்கள், அந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் தாமதமின்றி சட்டத்திற்கு முன்கொண்டு வரப்பட்டு, சட்டத்தை அமுல்படுத்தி, அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும்.

ஒரு சிறிய தரப்பினரான அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையை மற்றுமொரு சிவில் யுத்த்தை நோக்கி இட்டுச் செல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.-TC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :