த.நவோஜ்-
அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்திய வரும், எமது கோணேச பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமரர்.சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆறாவது தின நினைவு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அமெரிக்க நாட்டின் இந்து சமய துறவியாக இருந்து இலங்கை மண்ணில் இந்து சமயத்தை வளம்படுத்திய வரும், எமது கோணேச பூமியிலே சமாதி அடைந்தவரும், இலங்கை இந்து சமய அபிவிருத்தி சபையின் தலைவருமான அமரத்துவமடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் ஆறாவது தின நினைவு நிகழ்வையொட்டி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள சுவாமியில் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டி வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், மட்டக்களப்பு காந்தி சேவா சங்க தலைவர் எஸ்.செல்வேந்திரன், மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்க உறுப்பினர் எஸ்.சிவபாதசுந்தரம், பேரவையின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
0 comments :
Post a Comment