சமாதானத்தைப் பாதுகாப்புடன் செயற்படுத்துகின்ற ஒரு முன்மாதரியான பிரதேசமாக மாவத்தகம பிரதேசம் விளங்கின்றது

இக்பால் அலி-

மாவத்தகம தேர்தல் தொகுதியில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான இன மத முரண்பாடுகள் இதுவரை நடைபெறவில்லை. 

சமாதானத்தைப் பாதுகாப்புடன் செயற்படுத்துகின்ற ஒரு முன்மாதரியான பிரதேசமாக மாவத்தகம பிரதேசம் விளங்கின்றது. அளுத்கமை, பேருவளைச் சம்பவம் ஒரு துரதிருஷ்டமான சம்பவமாகும். 

அந்தச் சம்வபம் அந்த எல்லைக்குள் மாத்திரம் இருக்கட்டும் அது ஏனைய பிரதேசங்களுக்கு பரவமாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இது இந்நாடடில் வாழும் சகல இன மக்களுடைய பொறுப்பு வாய்ந்தவை என்று குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் அளுத்கமை, பேருவளை இன வன்முறையை கருத்திற் கொண்டு மாவத்தகம பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நிலையான பாதுகாப்பையும் வலியுறுத்தி பறகஹதெனிய தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தேசபந்து சேனாரத்ன தலைமையில் இன்று 23-06-2014 கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

சட்டம் நீதி என்பது பொதுவானது. சகலருக்கும் சம அடிப்படையிலே இந்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது. அபிவிருத்திப் பணிகளும்தான் சம நீதியாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. நான் பாடசாலையில் கல்வி பயிலும் போது என்னுடைய வகுப்பில் பல்லின மாணவர்கள் இருந்தார்கள். நாங்கள் மிகுந்த ஒற்றுமையுடன் எந்தவிதமான பகையுணர்வுமின்றி ஒழுக்க விழுமியத்துடன் கல்வி கற்றோம். இந்நாட்டில் நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற மனப்பாங்கை எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தேசபந்து சேனாரத்ன பேசுகையில் குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பிரதேசத்தல் நடந்த சம்பவம் இரு பைத்தியகாரர்களுடைய வேலையாகும். தர்காடவுன் மற்றும் பேருவளைச் சம்பவத்திற்குப் பிற்பாடு எனக்கு நிம்மதியாகத் தூக்கம் வருவதில்லை. மாவத்தகம நகரில் அல்லது பறகஹதெனிய பிரதேசத்தில் என்ன நடக்கமோ என்ற நிலை எனக்கு இருந்தது. ஆனால் பறகஹதெனிய மக்கள் இந்தப் பிரதேசத்தில் சமாதானத்தையும் அமைதியையும் முன்னெடுத்துச் செல்வதற்கு துணையாக இருந்து வருகின்றனர் என்று கூறிக் கொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். எனினும் இடங்களிலிருந்து வந்து குழப்பத்தைத் தூண்டக் கூடியவர்கள் குறித்து மிகக் கவனமாக இருத்தல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், பிரதேச சபை உறுப்பினர் யாசிம் ஆசிரியர், மாவத்தகம பிரதேச செயலாளர் ஏக்கநாயக்க, முஸ்லிம், சிங்களப் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டவர்கள் இங்கு உரையாற்றினர்.

மாவத்தகம அமைந்துள்ள 30 விஹாரையிலும் அளுத்கமை பேருவளை போன்ற அசம்பாவங்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது எனவும் சாதி, மத பேதமின்றி எல்லோரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று விடயத்தை வலியுறுத்தி போதனைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் மாவத்தகமவிலுள்ள முஸ்லிம் மக்கள் எவ்வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையுமில்லை என்று அங்கு வருகை தந்த பௌத்த சமயத் தலைவர்கள் முஸ்லிம் மக்களைப் பார்த்து வேண்டுகோள் விடுத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :