பொபொதுபல சேனா அமைப்பு இன்றைய தினம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு தடை செய்யப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு இன்று மாலை 3 மணியளவில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் ‘அதிஷ்டான பூஜை’ எனும் பெயரில் சமய வழிபாட்டு நிகழ்வு ஒன்றை நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிகழ்வு ஒரு சமய நிகழ்வாக நடைபெறவுள்ளதால் அதனைத் தடை செய்ய முடியாது என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத் தூண்டவோ இந்த சமய நிகழ்வை பயன்படுத்திக் கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிங்கனை, கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த 300 முதல் 400 பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன் குறித்த சமய நிகழ்வினை நடாத்த உத்தேசித்துள்ளதாக பொதுபல சேனா இயக்கம் அறிவித்துள்ளது.
என்றாலும் குறித்த நிகழ்வை நடாத்த தலதா மாளிகை நிர்வாகத்தினர் நேற்று இரவு வரை அனுமதி வழங்கியிருக்கவில்லை என ஆங்கில செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

0 comments :
Post a Comment