இன்று அதிகாலை ரத்மலான பகுதி பள்ளிவாயல் ஒன்று இனம் தெரியாத நபர்களால் தீமூட்ட எடுத்த முயற்சி முறியடிக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
ரத்மலானை, போருபன ‘தாலயம்பாவா’ ஜும்மா பள்ளிவாயலுக்கு இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் தீ வைக்க முயற்சி ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிவாயல் அருகில் தங்கியுள்ள மவ்லவி மற்றும் அருகில் வசிக்கும் குடும்பத்தினர் பள்ளிவாயலின் முன்பக்க கதவுக்கு அருகில் இருந்து புகை மற்றும் தீயை அவதானித்து உடனடியாக தண்ணீர் மூலம் தீயை அணைத்துள்ளனர்.
தீ ஏற்பட்ட இடத்தில் (பள்ளியின் முன்பக்க நுழைவாயில்) மண்ணெண்ணெய் வாசம் வந்ததாகவும், தீ பரவுவதற்கு முன்னர் அணைக்கப்பட்டதாவும் அங்கிருந்த சகோதரர் தெரிவித்தார்.
அத்துடன் இதுபற்றி போலிசுக்கு தெரிவிக்கப்படு பொலிசாரும் உடனடியாக பள்ளிவாயலுக்கு வந்து மேலதிக விசாரணைகளை மேட்கொண்டதகவும்,
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பள்ளிவாயலுக்கும், பொருட்களுக்கும் சேதங்கள் இல்லை ஆனால் புகை காரணமாக பள்ளிவாயலின் உள்பக்க சுவர்கள் கருப்பாகி உள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.
மட

0 comments :
Post a Comment