நரி பாதி, பெண் பாதியாக அமர்ந்து ஆரூடம் கூறும் விசித்திர பெண் - வீடியோ,படங்கள்

பாகிஸ்தான் கராச்சி நகரிலுள்ள மிருகக்காட்சிச்சாலையில் உடலின் கீழ்ப்பகுதி நரியின் உருவத்திலும், மேல் பகுதி பெண் உருவிலும் பெண் ஒருவர் எதிர்காலம் தொடர்பில் ஆரூடம் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

மும்தாஸ் பேகம் என்ற பெண் புனைப்பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொண்ட 33 வயதான முராட் அலி என்பவரே இவ்வாறு மிருகக்காட்சிசாலையில் ஆரூடம் கூறி வருகிறார்.

நரிப்பெண் என அழைக்கப்படும் மும்தாஸ் பேகம் பாதி பெண் பாதி நரி வேடமிட்டு தினசரி 12 மணித்தியாலங்கள் இவ்வாறு ஆரூடம் கூறி வருகின்றார்.

உள்நாட்டு மொழிகள் பலவற்றையும் உரையாடும் வல்லமையைக் கொண்ட இவர் தனது தொழில் குறித்து கூறுகையில், வாழ்க்கை குறுகியது. இங்கு வருகை தரும் மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் நானும் மகிழ்ச்சியடைவதாக உணர்கின்றேன் என்று கூறியுள்ளார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :