நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைப்பு


கொழும்பு, பாலத்துறை, சேதவத்தை பகுதியில் நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரிப்பு நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அத்துடன் அந்த நிலையத்திலிருந்து நுகர்விற்குதவாத சுமார் 25,000 கிலோகிராம் நூடில்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நூடில்ஸ் தொகை நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான நூடில்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காலாவதியான மா மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நூடில்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நூடில்ஸ், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.

நுகர்விற்குதவாத நூடில்ஸ் தயாரித்த சம்பந்தப்பட்ட நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :