ஈராக்கிற்கான பயணங்களில் அவதானம் தேவை என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்


ராக்கில் நிலவுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக மறுஅறிவித்தல் வரை அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சு, இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் ஈராக்கில் தற்போது தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும், பக்தாத்திலுள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு, தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுள்ளது.

0096 4770 48 47 458 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது slembirq@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் ஈராக்கிற்கான இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈராக்கில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு இதுவரை எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் சுமித் நாகந்தல சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதிகளில் இலங்கையர்கள் தங்கிருந்தமை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :