கனடிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் விட்பை (Whitby) என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரண்டு கார்கள், ஒரு டிராக்டர் டிரைலர், மற்றும் ஒரு பேருந்து இந்த விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு சிறிது நேரத்திற்கு பின் வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



0 comments :
Post a Comment