ஊவா மாகாண சபையை அடுத்த வாரம் கலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஜுலை மாதம் 01 ஆம் திகதி கலைக்கப்படுவதற்கு இடம்பாடு இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ மாகாண சபையைக் கலைக்குமாறு ஆளுனர் நந்த மதிவுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததன் பின்னர் ஆளுனரினால் சபை கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஒப்பமிடப்படும்.
இதற்கேற்ப, அடுத்த செப்டம்பர் மாதம் முதல் பகுதியில் அங்கு தேர்தல் நடைபெற சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.

0 comments :
Post a Comment