2013ஆம் ஆண்டு:வெட்டுப் புள்ளியினை ஓகஸ்ட்டில் வெளியிட நடவடிக்கை

டந்த 2013 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அளவில் தலைமைத்துவ பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து பல்கலைக்கழகங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :