முன்பள்ளிப்பருவ அபிவிருத்திக்குழு அமைத்தல் மற்றும் கலந்துரையாடல் - படங்கள்





பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப்பருவ அபிவிருத்திக்குழு அமைத்தல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலும் 08-இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் மட்டு –மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் எஸ். ரங்கநாதன் , மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப்பருவ அபிவிருத்திக்குழு இணைப்பாளர் வி.முரளிதரன் உட்பட பிரதேசசெயலாளர்கள், வைத்தியர்கள்;, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் பி.குணரட்னம், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,முன்பள்ளிப் பருவப்பிள்ளைகள் தொடர்புடைய அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 2013 ஆண்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் பற்றிய மீள்பார்வையும் புதிய திட்டங்கள் தொர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முன்பள்ளிப்பருவ அபிவிருத்தியி தேசியக் கொள்கையின் பிரகாரம் மாவட்ட மட்ட முன்பள்ளிப் பருவ அபிவிருத்திக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :