பௌஸி ஞாபகார்த்த சினேகபூர்வ உதைபந்தாட்ட விளையாட்டு விழா - படங்கள்

-எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-
ர்ஹும் எம்.ஐ.எம்.பௌஸி அவர்களின் மூன்றாவது வருட ஞாபகார்த்தமாக இன்று (2014-05-09)சாய்ந்தமருது பௌஸி ஞாபகார்த்த விளையாட்டரங்கில் சினேகபூர்வ உதைபந்தாட்ட விளையாட்டு விழா இடம்பெற்றது.

மூன்று சுற்றுக்களில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் பிரதம அதிதியாகவும் விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் அவர்களும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல்.மனாப் அவர்களும் பிரதிச்செயலாளர் ஏ.எம்.இப்ராஹீம் அவர்களும் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.

முதல் சுற்றில் கல்முனை சண்டோஸ் விளையாட்டுக்கழகமும் பிளேயிங் ஹோர்ஸ் கனிஷ்ட பிரிவும் மோதியது இதில் பிளேயிங் ஹோர்ஸ் கனிஷ்ட பிரிவு 2க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

இரண்டாம் சுற்றில் மருதமுனை யுனைட்டட் விளையாட்டுக்கழகமும் பிளேயிங் ஹோர்ஸ் Bபிரிவும் விளையாடியதில் இங்கு மருதமுனை யுனைட்டட் விளையாட்டுக்கழகம் 2 க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியது.

மூன்றாம் சுற்றில் வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக்கழகமும் பிளேயிங் ஹோர்ஸ் சிரேஷ்ட மோதியதில் இங்கு வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :