ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று-
அக்கரைப்பற்றுளூ பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக இருந்த கட்டாக்காலி மாடுகள் 45 இனை அக்கரைப்பற்று பிரதேச சபையினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (06.05.2014) மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது பிடித்துள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தலைமையிலான இச்சுற்று வளைப்பின்போதே இக் கட்டாக்காதலி மாடுகள் அகப்பட்டதோடு அம் மாடுகளை பிரதேச சபை வளாகத்தில் அடைத்து வைத்தனர்.இதனையடுத்து மறுநாள் புதன்கிழமை காலை மாடுகளின் உரிமையாளர்கள் பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் மாடுகளின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் உரிமையாளர்கள் இனிமேல் மாடுகள் வீதிகளுக்கு வராமல் கட்டி வளர்ப்பதாகவும் ஒழுங்காகப் பராமரிப்பதாகவும் வழங்கிய எழுத்து மூல உறுதி மொழிகளையடுத்து சிறியதொரு தண்டப் பணத்துடன் மாடுகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இதன்போது மாடொன்றுக்கு ஐநூறு ருபாவும் (500.00) கன்றொன்றுக்கு இரு நூற்றி ஐம்பது ருபாவும் (250.00) தண்டப் பணமாக பிரதேச சபைக்கு செலுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய மாட்டின் உரிமையாளர்கள் தண்டப் பணத்தை செலுத்திவிட்டு மாடுகளைக் கொண்டு சென்றனர்.
இக் கலந்துரையாடலில் அக்கரைப்பற்று கால் நடை வைத்தியர் டாக்டர் எம்.எச்.எம். ஹபீல், பிரதேச சபைச் செயலாளர் ஏ.எல்.சலாஹுதீன், பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் ஏ.எம்.அப்துல் மஜீத், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள்,; அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான கே.எம்.நஜுமுதின், ஏ.இல்யாஸ், ஏ.எம்.அஷ்ஹர். பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,கட்டாக் காலி மாடுகளின் உரிமையாளர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக இக் கட்டாக்காலி மாடுகள் வீதிப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்ததோடு, பல்வேறு வாகன விபத்துக்களுக்கும் காரணமாக இருந்தது. அதுமாத்திரமன்றி வீதியையும் சாணி மூலம் அசுத்தப்படுத்தி மாணவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதோடு, குடியிருப்புக்களுக்குள் இக் கட்டாக்காலிகள் புகுந்து வீட்டுத் தோட்டப் பயிhகளுக்கும் சேதத்தை உண்டு பண்ணி வந்தது இது பற்றி பொது மக்கள் நீண்டகாலமாக பிரதேச சபைக்கு செய்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தெரிவித்தார்.
இனிமேல் மாடுகள் பராமரிப்பின்றி கட்டாக் காலியாக வீதிகளில் அலைந்து திரிந்தால் பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment