திருமணமான 3 மாதத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை - பரபரப்பு சம்பவம்

சென்னை குமரன் நகர் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த புதுப்பெண் ரேகா, திருமணமான 3 மாதத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போரூர் ஏரியில் சாக்கு மூட்டையில் உடலை கட்டி வீசி விட்டு, தப்பிய மாதவரத்தை சேர்ந்த டிரைவர் சாம்சனை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரேகா மீது சாம்சனுக்கு ஏற்பட்ட ஒருதலைக் காதலே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரும் ரேகாவை விரட்டி விரட்டி காதலித்த சாம்சன், "உனது கணவனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவர் இதுபற்றி குடும்பத்தினருடன் சென்று மாதவரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சாம்சனை அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதன் பின்னர் 3 மாதங்கள் காத்திருந்து, திருமணம் முடிந்த பின்னர் ரேகாவை, கடத்திச் சென்று சாம்சன் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 1–ந்தேதி மாயமான ரேகா, 3–ந்தேதி அன்று போரூர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். எனவே அவரை கடத்திச் சென்ற சாம்சன், எங்காவது அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதன் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக கூறு போட்டு சாக்கு மூட்டையில் கட்டி சாம்சன் ஏரியில் வீசியுள்ளார். இக்கொலையை அவர் மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், 2 அல்லது 3 பேர் அவருக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

ரேகாவை கொன்று விட்டு தப்பிய சாம்சன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைப் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

சென்னையில் இருந்து தப்பிச் சென்ற சாம்சன், புதுவைக்கு சென்று அங்கிருந்து கோவைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் சாம்சன் பிடிபடுவார் என்றும், அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் தெரிவித்தார்.

ரேகாவை கடத்திச் சென்ற சாம்சன், அவரை எங்கு வைத்து கொலை செய்தார்? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. சாம்சன் சிக்கினால் மட்டுமே இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :