காவியுடை தரித்த சிலரால் பிக்கு சமூகத்திற்கே இழிவு - பெளத்தசாசன பிரதியமைச்சர்

காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக புத்திக பதிரண எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஒழுக்க மீறல்கள், குற்றவியல் சட்டங்களின் கீழ் தவறு புரிந்த காவியுடை தரித்தவர்கள் தொடர்ந்தும் சாசனத்தில் இருப்பது பெளத்த சாசனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதையும் ஏற்கிறேன்.

இவர்களை சாசனத்தில் இருந்து அகற்றுவதற்கு அந்தந்த பெளத்த மதப் பிரிவுகளின் சங்க சபைக்கோ மகாநாயக்கர்களுக்கோ அதிகாரம் இல்லை என்பதையும் அறிவேன். 

ஒழுக்க மீறல் தொடர்புடைய காவியுடைதரித்தவர்கள் தொடர்பில் செயலாற்ற சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :