சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு மக்களுக்காக 300 மிலியன்

இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இலங்கை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

சம்பூரில் இந்தப் பிரச்சினை காரணமாக இடம்பெர்ந்தோர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் அரச வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசின் இந்தத் திட்டத்தின்படி, சம்பூரிலிருந்து இடம்பெர்ந்தோர் , தமது கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்று நிலங்களைப் பெற முடியும். அதை விரும்பாதோருக்கு நஷ்டஈட்டுத்தொகைத் தரப்படும் என்றார் அரச வழக்கறிஞர்.

ஆயினும் இவ்வாறு காணிகளை கையகப்படுத்துவது சட்டத்திற்கு மாறான ஒரு செயல் என மனித உரிமைகள் சம்பந்தமான வழக்குகளில் ஆஜராகும், வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் காணி சட்ட விதிமுறைகளின்படி, தனிப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆயினும் இங்கு அவ்வாறான

விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை . எனவே எதிர் காலத்தில் காணிகளை கையகப்படுத்த வேண்டுமானால் பொதுவாக அமல்படுத்தப்படும் சட்ட விதிமுறைகளுக்கு அமைய, அதனை அரசாங்கம் மேட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க.

ஆயினும் அரச வழக்கறிஞரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி மொகான் பீரிஸ், மாற்று காணிகள் மற்றும் நஷ்ட ஈடுகள் பெற்றுக்கொள்ள விரும்பும் இடம் பெர்ந்தோர் சம்பந்தமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு, அரச தரப்பிற்கு உத்தரவிட்டார்.

பின்பு வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 9ம் திகதி வரை ஒத்திவைத்த பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், அன்றைய தினம் இந்த தீர்வு திட்டம் சம்பந்தமாக, மனுதாரகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.
பிபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :