யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்;ட மாணவ ஆலோசகர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் யாழ்.மாவட்ட படைகளின் தளபதிக்கு இடையிலான கலந்துரையாடல் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்செவன விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (07) நடைபெற்றது.
இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் முள்ளவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்துள்ளதால் அவர்களை நினைவுகூர்ந்து பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் துக்க தினத்தினை அனுஷ்டிக்க அனுமதிக்கும்படி மாணவர் ஒன்றியத்தினர் கேட்டிருந்தனர்.
எனினும் அதற்கு இராணுவத்தளபதி, கூட்டமாகச் சேர்ந்த அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக நீங்கள் உங்கள் வீடுகளில் அனுஷ்டிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர அரசியல் விடயங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும் உதயபெரேரா மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழத்திற்கோ அல்லது விடுதிகளுக்கோ இராணுவத்தினர் உள்நுழையாமல் இருக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment