கொழும்பு, கோட்டையிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தேசத்துக்கு மகுடம் ரயிலின் என்ஜின் பெட்டியில் பயணித்த ரயில் சாரதியின் மனைவிக்கு 4 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்திடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மேற்படி ரயிலை சோதனையிட்ட போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், குறித்த ரயில் சாரதியின் மனைவியை பிடித்து, தண்டம் விதித்துள்ளனர்.
புகையிரதத்தின் என்ஜின் பெட்டியில் ரயிலின் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே பயணிக்க முடியும். இருப்பினும், சம்பவதினம், ரயில் சாரதியின் மனைவியும் அதில் பயணித்துள்ளார். இதனை ரயில் சாரதி படம்பிடித்தும் உள்ளார்.
இந்நிலையில், குறித்த ரயிலின் என்ஜினில் பெண்ணொருவர் பயணிப்பதை அவதானித்துள்ள பயணிகள் சிலர், ரயில்வே திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment