SLAS சித்தியடைந்தவர்களைப் பாராட்டும் நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றது -படங்கள்






அஸ்ரப் ஏ சமத்-

2012 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாகசேவைக்கு (எஸ்.எல்.ஏ.எஸ்) தெரிவாகி தற்சமயம் உதவிச் செயலாளராக பதவி வகித்துவரும் எம்.ஏ.சி.றமீஸா, ஐ.எம்.றிகாஸ், எஸ்.எம்.அல் அமீன்,என்.எம்.நௌபீஸ் ஆகியோர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் சமூகஆய்வுமையத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் அல் அஸ்கர் பெண்கள் உயர்தரபாடசாலையில் இடம்பெற்றது. 

இவ்வைபவத்தின் அதிதிகளாகஉற்பத்திதிறன் ஊக்குவிப்புஅமைச்சர் பசீர் சேகுதாவூத்,பொருளாதாரஅபிவிருத்திபிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாகிழக்குமாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,மாகாண சபை உறுப்பினர் சிப்லிபாறுக்,முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும் தற்போதையஏறாவூர் பிரதேசநகரசபையின் தவிசாளர் அலிசாகிர் மௌலானாஉட்பட இன்னும் பலஅதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இவ் வைபவத்தில் கிழக்குமாகாணவிவசாயகால்நடைஉற்பத்தி,கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடிமற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் உரையாற்றுகையில் நிர்வாக சேவை பதவியானது உயர்வானதாகவும் கன்னியமானதாகவும் மதிக்கப்படுகிறது. 

இது அரசாங்கநிருவனங்களுடன் மாத்திரமின்றிபொதுமக்களுடனும் நெருக்கமானதொடர்பைகொண்டிருப்பதால் அதனை இறைவனுக்குபொருத்தமானமுறையில் பயன்படு;த்திக் கொள்ளவேண்டுமென அமைச்சர்  தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :