எஸ்.சிவகாந்தன்-ஊவாமாகாண சமூக சேவைகள் நலன்புரி அமைச்சர் செந்தில் தொண்டமானின் பணிப்புரமைக்கமைய சமூக சேவைகள் திணைக்களத்தினால் பண்டாரவளை
தூல்கொள்ள அசோக பாடசலையில் இலவச நடமாடும் சேவைகள் அன்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊனமுற்றவர்களுக்கான சக்கர
நாற்காலிகள், ஊன்றுகோல்கள், செவிபுலன் கருவிகள், மூக்கு
கண்ணாடிகள், முதியோர் ஊக்குவிப்பு மாதாந்த முத்திரைகள், ஆங்கில
மற்றும் ஆயுர்வேத மருத்துவம் சேவைகள் என்பன நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் மற்றும் ஊவா
மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி, வினித்தா
திசாநாயக்க ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment