சந்தை தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து

எம்.எம்.ஜபீர்-
த்தியமுகாம் 4 ஆம் கொளனி பாமடி சந்தை தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.ஆனந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

நாவிதன்வெளி பிரதேசத்தில் பலவருடமாக சந்தை இயங்காத காரணத்தினால் வீட்டுத் தோட்டங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து வருமானத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாய்பை கடந்த காலங்களில் பிரதேச சபையை ஆட்சி செய்த தவிசாளர்கள் மக்களிற்கு ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்யவில்லை. 

இருந்த போதிலும் மத்தியமுகாம் பாமடி வாராந்த சந்தை எனது ஆட்சிக்காலத்தில் மக்களின் பாவனைக்காக வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

மூவின மக்களும் இப்பிரதேசத்தில் சந்தோசமாக நடமாட வேண்டும், ஐக்கியமாக பழக வேண்டும் என்ற காரணத்தினால் இப்பொதுச் சந்தைக்கு வருகின்ற வருமானத்தையும், பொறுப்பையும் இந்த ஆண்டு தற்காலிகமாக மத்தியமுகாம் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வழங்கியுள்ளேன். மத்தியமுகாம் பிரதேசத்தில் தற்போது நடைபெறும் மீன் சந்தையை 4ஆம் கொளனி பாமடிக்கு மற்றுவதற்கு மத்தியமுகாம் மீன் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

நாவிதன்வெளி பிரதேச சபை பிரிவில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் மத்தியமுகாம் நகரத்தை நவீன முறையில் திட்டங்களை கொண்டுவந்து அழகுபடுத்துவது எமது நாவிதன்வெளி பிரதேச சபைக்கு பாரிய பொறுப்பாக காணப்படுகின்றது.

கடந்த பிரதேச சபை தேர்தல் முடிந்தவுடன் பிரதேச சபை உறுப்பினர்களின் விசேட கூட்டத்தில் பிரேணை கொண்டுவரப்பட்ட போது முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ரி.கலையரசன் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எஸ்.குனரெட்னம் ஆகிய இருவரும் பொதுச் சந்தையை நடாத்துவதற்கு தடையாக இருந்ததாக தொரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :