அரசுக்கு அரபு நாடுகளின் ஆதரவு - பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கு இடி ...!



ர்வதேசத்தின் சதியை எதிர்க்க அரசாங்கம் அரபு நாடுகளை நாடும்போது பொதுபல சேனா இலங்கை முஸ்லிம்கள் மீது துவன்சம் செய்வது வேதனைக்குரிய விடயமாவுள்ளது. இந்தவகையில் நோக்கும்போது இலங்கையில் சமாதானம் என்பது காணல் நீரான விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது. காரணம் இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் மீது பொதுபலசேனா மேற் கொண்டு வரும் தொடர் அடாவடித் தனங்கள் ஒரு புறமும் மறுபுறம் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பதும் இலங்கையின் சமாதானம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.

இலங்கை சர்வதேச ரீதியாக தற்போது எதிர் கொண்டு வரும் ஒரு அபாயகரமா நிலைமையில் அதனைப்பற்றி சிந்தித்து அந்த நிலைமைகளில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நேரத்தில் ஒரு சில இனவாதக் கூட்டம் இன்று எதனையுமே சிந்திக்காது சிறுபான்மையினரை தாக்குவதற்கும் அவர்களை அழித்தொழிப்பதற்குமே கங்கனங் கட்டிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் காணப்படும் இந்நிலையில் சமாதானம் அல்லது சுமுக நிலை எவ்வாறு இலங்கையில் தோன்றும் என்பதனை மக்கள் நம்ப முடியும்.

அரசானது இன்று சர்வதேச ரீதியாக தமக்கு ஏற்பட்டுள்ள யுத்தக் குற்ற எதிர்ப்பலைகளை சமாளிக்க பல்வேறு நாடுகளை நாடிய போதிலும் அவற்றில் சில இன்று ஒதுங்கும் நிலைமைகளிலும் வேறு சில நாடுகள் இலங்கைக்கு எதிரான கொள்கைகளுடன் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அன்றும் இன்றும் இலங்கைக்க அதிகம் கைகொடுக்கும் நாடுகள் என்றால் அது முஸ்லிம் நாடுகள்தான் குறிப்பாக அறபு வசந்தங்கள்தான் அந்நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் ஒரு வளர்முக நாடு என்றும் இங்கும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்ற நற்பின் காரமாக இன, மத பேதம் பாராது மரணத் தருவாய்க்கு உதவதுபோல் உதவி வருகையில் அதற்கு இந்த அரசு எந்தளவு மதிப்பளிக்க வேண்டும்?

மாறாக இலங்கை முஸ்லிம்களுக்கு பொதுபல சேனா என்ற நச்சுக் கிரிமிகளை ஏவவிட்டு வழங்கும் சன்மானமா?எனவும் இன்று பொதுபல சோன மீள்குடியேறிய மக்களின் இடங்களுக்குள் காலடி பதித்தமை அம்மக்களின் மற்றொரு தாக்குதலுக்கும் இன அழிவுக்குமான அடித்தளமாகவே அமைந்து வருகின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு வடக்கில் இருந்து வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டு பல்வேறுபட்ட இடங்களிலும் பல்வேறு வகையான துன்ப, துயரங்களை அனுபவித்து வாழ்விடம் கிடைக்குமா?கிடைக்காதா? என்ற கால ஓட்டத்தில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நிம்மதியாக வாழலாம் என்ற நோக்கில் தாம் அனுபவித்த துன்பங்களுக்கு மத்தியிலும் அகதியாய் இருந்த வேளையில் அன்றாடம் சிறுகச் சிறுக கிடைத்த உதவிகளில் இருந்தும், தாம் செய்த தொழில்கள்கள் மூலம் கிடைத்த சிறு வருவாய்களில் இருந்தும் கிடைத்த வற்றைக் கொண்டு மீண்டும் மீளக் குடியமர்ந்த மக்களின் துன்பங்களைப் போக்காமல் அவர்களை அங்கிருந்தும் விரட்டுவதற்கு பொதுபல சேனா தனது சண்டித்தனத்தை அம்மக்கள் மீளக் குடியமர்ந்து நிம்மதியில்லாமல் வாழும் குடில்களுக்குச் சென்று தமது சண்டித் தனத்தை கடந்த செவ்வாயக்கிழமை (08) காட்டியது சகல முஸ்லிம்களையும் கிளி கொள்ளச் செய்துள்ளது.

ஞானசாரர் தலைமையிலான பொதுபல சேனா சண்டியர் குழுவினர் கடந்த 08 ஆம் திகதி மன்னாருக்கு சென்றபோது அங்குள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படிக் குழுவினர் பல வாகனங்களில் மன்னாரில் சிலாவத்துறை மற்றும் மரிச்சிக்கட்டிப் பகுதியில் சென்றுள்ளதால் மக்களிடத்தில் ஒருவகையான அச்ச நிலையும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களின் வருகையை முன்னிட்டு படைத்தரப்பினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை மக்கள் மத்தியில் அரசின் மீதான பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக மேற்படி விடயம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கைங்கரியமாகவே நோக்கப்படுகின்றது.

மேற்படி இனவாதக் குழுவினர் கடந்த இரண்டு வருடகாலமாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் சமயங்கள் மீது மிளேச்சத்தனமான செயற்பாடுகளை செய்தமை மற்றும் சமயத் தளங்களை உடைத்தமை, சமய விழுமியங்களையும் அவற்றின் கௌரவத்தையும் கொச்சைப்படுத்தியவர்கள் என்ற வகையில் இவர்கள் மன்னாருக்கு மேற்கொண்டுள்ள விஜயமானது இனங்களுக்கிடையில் மேலும் முறுகள் நிலைமைகளை தோற்றுவிப்பதற்கும் மீள் குடியமர்ந்த மக்களின் மீள் வாழ்க்கையை மேலும் சீர்குலைப்பதற்கான பாரியதொரு திட்டத்தின் பிண்ணனியில் இவர்கள் சென்றிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறு மக்களின் ஜனநாய உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் அச்சுறுத்தம் வகையில் கம்பெடுத்தவனெல்லாம் சண்டைக் காரன் மாதிரி அனுமதியற்ற குழுவினர் செயற்படுவதற்கும், விடுதலைப் புலிகள் செயற்பட்டதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

விடுதலைப்புலிகள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் மாற்றமாகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்தால் அவர்கள் அழிக்கப்பட்டால் அவ்வாறானதொரு போக்கைவிட அரசாங்கத்தையும், சட்டத்தையும் ஏன் நீதித்துறையையும் எதிர்த்து சவால்விடும் வகையில் மக்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் நேரடியாக தம்மை அடையாளம் காட்டி செயற்படும் கூட்டத்தையும் அரசும், படைத்தரப்பினரும் அழிக்கவல்லவா? வேண்டும்.

இங்கே எது நியாயம் எது அநியாயம் என்பது இனங்கான முடியாதளவு இன்று மேற்படி தீவிரவாதக் குழுவிற்கு அரசு பாதுகாப்புக் கொடுத்து முஸ்லிம்களின் பூர்வீகங்களை பார்த்து வருவதற்கும் அங்கு சென்று அட்டகாசம் புரிவதற்குமான உரிமை என்ன உரிமை? என முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அரசிடமும் ஜனாதிபதியிடமும் கோருகின்றனர்.

முஸ்லிம்கள் காணிகளை அபகரிக்கின்றனர் என்றால் ஏன் இவர்கள் இலங்கையின் வடகிழக்கப் பகுதிகளை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தபோது சென்று பார்க்கவில்லை? அப்போது இவர்கள் பார்த்திருந்தால் இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகம் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம்.காரணம் அன்றே அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று ஒன்றும் இல்லை என்றதனால் அவர்கள் குத்தாட்டமும் கும்மாளமும் போடுவதாகவும் இது அவர்களின் சாவுமணிக்கான விரைவான ஆரம்பமே என புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.


இவர்கள் அரசின் ஆசீர்வாதம் இல்லாமல் ஒரு அங்குலம் கூட அப்பூர்வீகத்திற்குள் செல்ல முடியாதவர்களாகவே காணப்படுகின்றனர் காரணம் அந்தளவிற்கு சிறுபான்மை மக்களின் உள்ளங்களை குதறிவிட்ட கும்பலாகவே பொதுபல சேனாவை மக்கள் வஞ்சிக்கின்றனர்.


யுத்தத்தின் வடுக்களில் உயிர் வாழ்ந்த மானிடத்தை மானிட மகிமை தெரியாத இவ்வாறானவர்களை அரசு தனது பாதுகாப்பில் அனுப்ப முடியுமானால் ஏன் இலங்கை சர்வதேசத்தில் இரட்டை வேடம் போட வேண்டும் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை கோர வேண்டிய தேவையில்லையே? என முஸ்லிம்கள் கேட்கின்றனர்.

சர்வதேச குற்றத்தைப் போக்க முஸ்லிம் நாடுகள் தேவை என்றால் அவை செய்யும் உதவிக்கு இலங்கைக்குள் இருக்கும் சொற்ப முஸ்லிம்களை பற்றி எந்தளவு கவனமெடுக்க வேண்டும் ஆனால் மாறாக முஸ்லிம்களை அரசு நன்றிக் கடன்பட்டவர்களாக நோக்க வில்லை ஒடுக்குவதற்கு இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட ஒரு விடயமாகவே அரசின் நடவடிக்கையை முஸ்லிம் சமுகம் நோக்குகின்றது.

ஞானசார தேரரைப் பொருத்வரையில் இலங்கையில் பர்மா பொன்றதொரு நிலையை தோற்றுவிப்பதற்கு சகல வழிகளிலும் திட்டங்களைத் தீட்டி வருகின்றார். அவர் அன்மையில் பர்மா சென்று சர்வதேசத்தின் பயங்கரவாத முகம் என வர்ணிக்கப்படும் விராது தேரரை சந்தித்து இலங்கையில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளமையின் ஒரு வெளிப்பாடாகவே மீளக் குடியமர்ந்த முஸ்லிம் மக்களின் பகுதிக்குள் கடந்த 8 ஆம் திகதி அத்துமீறிச் சென்ற ஞானசார தேரரின் செயற்பாடு காட்டி நிற்கின்றது.

ஜனநாயக நாடொன்றில் ஒரு மனிதனின் சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு சட்டத்துறையும், நீதித்துறையுமே கட்டுப்பாடகளையும், தடைகளையும் விதிக்க முடியும் என இருக்கும்போது மரிச்சிக்கட்டி மக்களை ஞானசார தேரர் எவ்வாறு நேரடியாகச் சென்று அவர்களை அங்கிருந்து அகற்றச் சொல்ல முடியும்?


இலங்கையில் சட்டம் ஞானசார தேரருக்கும், குப்பை துப்பரவுத் தொழிலாளிக்கும் ஒரே வகையானது என்பதனை உணராத ஞானசாரர் தேரர் போல் சிறுபான்மைச் சமுகம் ஒரு பெரும்பான்மைச் சமுகத்தின் பகுதியில் சென்று செயற்பட்டால் நிலைமை எவ்வாறிருக்கும்?

பெரும்பான்மை என்ற கர்வத்தால் சும்மா வாலாட்ட முடியாது சிறுபான்மை மக்களுக்கும் பொறுமை உண்டு என்பதனை ஞானசரா தேரர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதனை மரிச்சிக்கட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமைதியாக வாழ முற்படும் மக்களை மீண்டும் சீண்டிவிட்டு இலங்கையின் அமைதியான சூழ்நிலையை இல்லாதொழிக்கச் செய்வதற்கான பொதுபல சேனாவின் செயற்பாடுகளை ஜனாதிபதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விடப்பட்ட வன்னமேயுள்ளன ஆனால் அவற்றிற்கு முன்னேற்றம் காணப்படவில்லை என்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

இதேவேளை ஜனாதிபதி சிறுபான்மை பெரும்பான்மை என்ற ஒன்றில்லை என்கின்றார் ஆனால் அதற்கு மாற்றமான செயற்பாடுகளை பொதுபல சேனா உள்ளிட்ட இனவாதக் குழுக்கள் செய்து வருவதில் இலங்கை வாழ் மக்களிடத்தில் பாரிய சந்தேகங்கள் தொடர்ந்த வன்னமேயுள்ளன.

இதேவேளை பொதுபல சேனாவின் தீய செயற்படுகளை கண்டித்து 15 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் மகஜர்களை ஜனாதிபதிக்கு அனுப்பட்டமைக்கு கிடைக்கும் விடையில்தான் பாரியதொரு எதிர்பார்ப்புள்ளமையை இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆரசாங்கம் செய்ய வெண்டிய வேளைகளை தனிப்பட்டவர்கள் செய்வதென்றால் இனி எல்லாக் குழுக்களும் தத்தமது கைங்கரியங்களைக் காட்டுவதற்கான தயக்கம் ஏற்படாது இவ்வாறனதொரு நிலைமைகள் ஏற்படுமானால் என்ன நிலைமைகள் ஏற்படும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். பௌத்தம் என்பதற்காக மற்ற சமுகத்தை தாக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்ற சட்டம் பௌத்தத்தில் உள்ளதா? என சிறபான்மை மக்கள் கேட்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :