வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி சந்தேக நபர் கைது

த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி வந்தவாகனமும், சந்தேக நபர் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுவரப்பட இருந்த நிலையில் சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதுரை மற்றும் பாலை மரங்கள் இருபத்தி நான்கு மற்றும் மரக்குற்றிகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :