இது பற்றிய தகவல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்திலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்தத் தகவல் உண்மையானால் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல், சூழலியல் ரீதியிலும் இது பெரும் நன்மை தரும் விடயமாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2012 ஆம் வருடத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 63 ஆயிரத்து 900 கோடி ரூபாவை நாடு செலவிட வேண்டியிருந்தது.
இது நாட்டின் மொத்த இறக்குமதியின் 26 வீதமாகும். இயற்கை எரிவாயு இலங்கைக்குக் கிட்டுமானால் இந்த எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் பல்லாயிரம் கோடி ரூபா அந்நியச் செலாவணி மிச்சமாகும். நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைந்து நாடு சுபீட்சமடையும். அதேசமயம், தற்சமயம் மின் உற்பத்திக்காக நிலக்கரியை எரித்து, நச்சு வாயு மற்றும் சாம்பல் மீதிகளை எதிர்கொண்டு, சூழலியல் பாதிப்புக்களில் சிக்கித் தவிக்கும் நாடு அதிலிருந்து மீளவும் வழி கிட்டும் என்றும் கூறப்படுகின்றது.

0 comments :
Post a Comment