இலங்கையின் கடற்படுக்கையின் கீழ் பெருமளவு எரிவாயு தேங்கிக்கிடக்கின்றது?

லங்கையின் கடற்படுக்கைக்குக் கீழ் பெருமளவு இயற்கை எரிவாயு புதைந்து கிடக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றதாம்! ஓர் ஆய்வுக் குழு இதனைக் கண்டுபிடித்திருப்பதாக அண்மையில் கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு வைத்துத் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

இது பற்றிய தகவல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணையத்திலும் இடம்பெற்றிருக்கின்றது. இந்தத் தகவல் உண்மையானால் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல், சூழலியல் ரீதியிலும் இது பெரும் நன்மை தரும் விடயமாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. 2012 ஆம் வருடத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக 63 ஆயிரத்து 900 கோடி ரூபாவை நாடு செலவிட வேண்டியிருந்தது.

இது நாட்டின் மொத்த இறக்குமதியின் 26 வீதமாகும். இயற்கை எரிவாயு இலங்கைக்குக் கிட்டுமானால் இந்த எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் பல்லாயிரம் கோடி ரூபா அந்நியச் செலாவணி மிச்சமாகும். நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைந்து நாடு சுபீட்சமடையும். அதேசமயம், தற்சமயம் மின் உற்பத்திக்காக நிலக்கரியை எரித்து, நச்சு வாயு மற்றும் சாம்பல் மீதிகளை எதிர்கொண்டு, சூழலியல் பாதிப்புக்களில் சிக்கித் தவிக்கும் நாடு அதிலிருந்து மீளவும் வழி கிட்டும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :