முஸ்லிம் மக்கள் மிகவும் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டிய தருணம் இது -உலமா சபை

முஸ்லிம் மக்கள் மிகவும் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் செயற்பட வேண்டிய தருணம் இதுவென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பௌத்த பீடங்களின் பீடாதிபதிகள் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை நீங்கி, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென பிரார்த்தனை செய்ய வேண்டும்.

முஸ்லிம் மக்கள் சமாதானத்திற்கும் ஐக்கியயத்திற்கும் முக்கியத்தும் அளிக்கும் ஓர் இன சமூகமாகும்.

புனித குர் ஆனை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு அண்மைக்காலமாக குற்றம் சுமத்தி வருகின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :