இறக்காமத்தில் சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் ஹக்கீம்





ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் 35 இலட்சம் நிதிஒதுக்கீட்டில் இறக்காம பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்ட சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத் திறப்பு விழாவும், விசேட தேவையுடையவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை ஊறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், பிரதேச சபைத் தலைவர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

சமூக சேவைகள் அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம், கணனி என்பன வழங்கப்பட்டதோடு, விசேட தேவையுடையவர்கள் என இனங்காணப்பட்ட 50 பேருக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :