ஜனாதிபதி மஹிந்தவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டாரை நிறுத்துவோம் - சபையில் ஐ.தே.க. சவால்


vk-
னாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த சபையில் சவால் விடுக்கின்றோம். நாம் தயாராகவே இருக்கின்றோம். 

எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை. ஐ.தே.க உரிய நேரத்தில் மஹிந்தவை வீழ்த்தக்கூடிய சூப்பர் ஸ்டார் வேட்பாளரை நிறுத்துவோம். இதற்கு அரசாங்கம் தயாரா என ஐ.தே.க எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டம் மீதான இரண்டாம் மூன்றாம் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்து கேள்வியும் எழுப்பினார்.

ஜோசப் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கமானது முற்று முழுதாக மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதுள்ளது. அபிவிருத்தியைக் காரணம் காட்டி நாடு சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாட்டின் வளங்கள் சீரழிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் தான் எதிர்க்கட்சிகள் விரும்புகின்ற தேர்தலை நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பினை நாம் வரவேற்கின்றோம்.

நாடு பாதுகாக்கப்பட வேண்டும். சீரழிவுகளுக்கு காரணமான இன்றைய அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும். எனவே உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :