தகவல் தொழில் நுட்ப பயிற்சியினால சான்றிதழ் வழங்கும் நிகழ்வு- பிரதம அதிதியாக அமைச்சர் மன்சூர்




ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
ம்மாந்துறை வெஸ்டா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வின்சிஸ் நெற்வேக் நிறுவனம் நடாத்திய தகவல் தொழில் நுட்பப்பயிற்சியை முடித்துக் கொண்ட இளைஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

வெஸ்டா இளைஞர் கழகத் தலைவர் எஸ்.முகம்மட் சிபான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூகசேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சி கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கலாநிதி.எஸ்.எல்.எம்.றியாஸ், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.எம்.பஸீர் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் இதில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

மாகாண தொழில் நுட்பக் கல்வியமைச்சர் உரை நிகழ்த்துகையில் ' எதிர்காலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள,; பல்வேறு சவால்களுக்கு முகங் கொடுக்க்க கூடிய தொழிற் பயிற்சியினைக் கற்பதன் முலமே சவால்களை வெற்றி கொள்ள முடியும். தொழிற் பயிற்சியினைக் கற்றுக் கொண்ட எவரும் காலத்தால் கைவிடப்படுவதில்லை. இதுதான் வரலாறு' எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :