பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டவர் கலேவெல பொலிஸாரால் கைது


பே
ஸ்புக் சமூக வளைத்தினூடாக யுவதி ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஹெலியகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல பகுதியை சேர்ந்த 24 வயதான யுவதியுடன் கடந்த ஒருவருடமாக பேஸ்புக் சமூக வளைத்தின் ஊடாக குறித்த இளைஞன் நட்பு கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் காதல் தொடர்பு மேற்கொண்டுள்ளதாகவும், அதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இளைஞனால் யுவதியின் ஆபாச புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனால் இரண்டு போலி முகப்புத்தக கணக்குகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யுவதியால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இளஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் தம்புளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டமையால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறித்த இளைஞனுக்கு உத்தரவிபடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :