அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் 21.04.2014ம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது 2014 ஆம் ஆண்டுக்கான நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் திரு.ஜெயரூபன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.மஜீட், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் யூ.எல்.ஸர்ஜூன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.அஸ்வத் அலி, இளைஞர் பாராளுமன்ற சபை முதல்வர் யூ.எல்.முஹம்மட் ஸபீர், செனட் சபை உறுப்பினர் ஏ.ஆர்.பௌஸான், கிராம சேவக உத்தியோகத்தர் அஸ்லம் சஜா மற்றும் கழகங்களை சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள், பொருலாளர்கள் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சோபர் விளையாட்டுக் கழகத்தின் பொருளாலரும், சோபர் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற சபை முதல்வருமான யூ.எல்.முஹம்மட் ஸபீர் பிரதேச இளைஞர் கழகங்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின்விபரம்
செயலாளர்- பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி,
பொருளாளர்- ஜே.எம்.ஹஸான்
அமைப்பாளர்- எம்.எஸ்ஜெனீஸ்
உப -தலைவர்- என்.எம்.பர்ஸாத்
உப -செயலாளர்- எம்.சர்ஜூன்
உப -அமைப்பாளர்- ஆஷீக்
கணக்கு பரிசோதகர்- சியாத்
இதன் போது 06 பிரிவுச் செயலாளர்களும், 5 ஒழுக்கக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

0 comments :
Post a Comment