மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும்'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் இடம் பெற்றுவருகின்றது. இதனடிப்படையயில் 22.04.2014 (இன்று) பொத்துவில் சின்ன உல்லே அல்-அக்ஷா வித்தியாலயத்தில்; பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு பிரதேச செயலகமும் கிராம சேவகர் பிரிவுளாக பிரித்து மக்களுக்க்hக சேவையினை வழங்கி வருகின்றது. இந்நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.
பொத்துவில் 05,18,19 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கு நடாத்தப்பட்டது. இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் மற்றும் அரச உயர் அதிகாரிகளும், திணைக்கள தலைவர்களும்,; பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

_wm.jpg)


0 comments :
Post a Comment