மனைவியுடன் தகராறு காரணமாக பிள்ளைகளை ஆற்றில் வீசிய தந்தை - வீடியோ இணைப்பு


NF-
மாத்தறை மஹானாம சமரவீர பாலத்திலிருந்து தமது இரண்டு பிள்ளைகளையும் நில்வலா ஆற்றில் வீசிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.

நேற்று  முற்பகல் 11.30 அளவில் குறித்த நபர் தமது பிள்ளைகளை ஆற்றினுள் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை கண்காணித்த இராணுவ வீரர்கள் சிலர் உடனடியாக சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட இரண்டு வயது சிறுவனும் நான்கு வயது சிறுமியும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் திக்வெல்ல ரத்மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தாயாருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து தம்மை அழைத்துவந்த தந்தை ஆற்றுக்குள் வீசியதாக குறித்த சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :