ஷங்காய் நகரைச் சேர்ந்த மிங்மியி சண் (34 வயது) என்ற பெண்ணே தமது மகனின் விரல்களை வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினம் தமது மகனின் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு உதவ கணவன் ரியு (38 வயது) உரிய நேரத்தில் வராததால் மிங்மேயி சண்ணே 8 வயது மகனின் வீட்டுப்பாடங்களை கவனிக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில் ரியு வீடு திரும்பியதும் அவருக்கும் மிங்மேயிக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது ரியு தனது படுக்கையறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்ளவும் மிங்மேயி சின மிகுதியால் தமது மகனின் 3 விரல்களை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு உடனடியான அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெட்டித்துண்டாக்கப்பட்ட விரல்களை மீளவும் வெற்றிகரமாக அவனுக்கு பொருத்தியுள்ளனர்.
இது தொடர்பில் சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான மேயிலிங் (52 வயது)விபரிக்கையில் வலியால் கதறிக்கொண்டிருந்ந சிறுவனை அவனது தந்தையே மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்ததாகவும் தந்தை புத்தி சாதுர்யமான முறையில் செயற்பட்டு சிறுவனின் வெட்டப்பட்ட விரல்களை ரஸ் கட்டியுடன் வைத்து துணியால் சுற்றி எடுத்து வந்ததாலேயே அவனது விரல்களை மீளப் பொருத்துவது சாத்தியமானதாகவும் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன

0 comments :
Post a Comment