பொதுவாக மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் உயிரினங்களைக் கொல்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
‘நான்கு (உயிரினங்கள்); அவை அனைத்துமே தீங்கிழைப்பவையாகும். அவை ஹரமுக்கு வெளியிலும், ஹரமுக்கு உள்ளேயும் கொல்லப்படும். (அவையாவன) பருந்து, காகம், எலி, கடிநாய்’ என ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அவர்களின் துனைவியார் ஆயிஷா (ரழியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: சஹீஹு முஸ்லிம், ஹதீஸ் எண்: 2253)
மனிதனுக்கு தொல்லை தரும் உயிரினங்களில் நுளம்பும் ஒன்றாகும். சில வேளை உயிராபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. நுளம்பு மட்டை (Mosquito Racket) என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி நுளம்பைக் கொல்லும் போது அதிலுள்ள மின்சாரத்தின் தாக்கத்தினால் ஏற்படும் இரத்த அழுத்தத்தினாலேயே நுளம்பு இறக்கின்றது.
எனவே, Mosquito Racket ஐப் பயன்படுத்தி தொல்லை தரும் நுளம்புகளைக் கொல்வதில் மார்க்கத்தில் எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

0 comments :
Post a Comment