நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள், நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிகக் கூடாது என்று ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்றும் இவருக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமிக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் மேற்குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை நாளை நீதிபதிகள் பிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் தோனி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment