SLMCயின் ஆசி இல்லாமல் சாய்ந்தமருதிற்கான பிரதேச சபை அமைக்க முடியாது நாபீர் அறைகூவல்

முஹம்மது காமில்-

டந்த வாரம் கத்தார் நாட்டின் சேனையா 44 இல் நடைபெற்ற புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுடனான உறவுப்பாலம் நிகழ்ச்சி கல்முனைக்குடி சகோதரர் ஜெசீம் பூட்டோ வினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்வில் நாபீர் பவுண்டேசன் அமைப்பின் தலைவரும் சமூக சேவகருமான பொறியியலாளர் அல்ஹாஜ் ரு.மு.நாபீர் அவர்கள் கலந்து கொண்டு தனது எதிர்கால அரசியல் பிரவேசம்இ சமூகத்துக்கான அபிவிருத்தி மற்றும் எதிர்கால பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களையும் அவர்களின் கேள்விகளுக்கான பதில்களையும் நிகழ்வில் கலந்து கொண்ட புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்தினார் இன் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பல ஊர்களையும் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சந்தர்பத்தில் கல்முனையில் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் சாய்ந்த மருது பிரதேசசபை அமைவது தொடர்பாகவும் எழுந்த கேள்விகளுக்கு அல்ஹாஜ் ரு.மு.நாபீர் அவர்கள் பின்வருமாறு பதில் அளித்தார். சாய்ந்தமருதிர்க்கான பிரதேச சபை என்பது எங்கள் எல்லோரினது கனவு ஆகும் அதற்காக எம்மை அடையாளப்படுத்திய கல்முனைத்தாயை நாம் ஒருபோதும் சின்ன பின்ன படுத்த இடமளிக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. 

சாய்த்தமருதுக்கு பிரதேச சபை வழங்கும் போது கல்முனை மாநகரின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள மருதமுனையையும் பாண்டிருப்பு பெரிய நீலாவனையையும் ஒன்றிணைத்து மருதமுனைக்கும் பிரதேச சபை வழங்குதல் வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் ஏற்ப்பட இருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்று கூறியதோடு. கல்முனை மாநகரில் இருந்த எத்தனை எத்தனை அரச காரியாலயங்களை தனது சொந்த தேவைகளுக்காகவும் ஏனைய சுயநலங்களுக்காகவும் தனது சொந்த ஊருக்கு மாற்றிச்சென்ற அரசியல்வாதி அமைச்சர் அதாவுல்லாவினால் எமது சொந்த பூர்வீக ஊரை கூறுபோட நாம் எப்படி அனுமதி அழிப்பது. 

எமது முஸ்லிம் சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் சக்திமிக்க கட்சியான முஸ்லிம்காங்கிரஸின் அனுசரணை இன்றி இந்த அமைச்சர் அதாவுல்லாவினால் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்க முடியுமா? நிச்சயமாக முடியாது எல்லாமே ஒரு அரசியல் நாடகம்தான் என்றும் கூறினார். 

சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காவும் அரசியலில் இறங்கி சமூகத்தை விற்று சுயநலத்திற்க்காக பிரதேசவாதம் பேசி கட்சிதாவும் ஐயோக்கியர்களை இனிமேலும் எமது சமூகம் அங்கீகரிக்குமா? என்று கலந்துகொண்ட புலம் பெயர் உறவுகளைப்பார்த்து கேள்வி எழுப்பினார். 

இந்த நாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் தம்மை வேதனை அடைய செய்வதாகவும் கருத்து தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :