சென்னை ராயப்பேட்டை, பாலாஜி நகர், அனுமந்தர் தெருவில் உள்ள அஜய் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு, மதர் சுல்தானா (வயது 65) என்ற பெண்ணும், அவரது மகள் மற்றும் பேத்தியும் தனியாக இருந்தனர். இரவு 9 மணி அளவில், 3 மர்ம நபர்கள் கதவை தட்டி, வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
அவர்கள் முகத்தில் கைக்குட்டையை முகமூடி போல கட்டி இருந்தனர். கத்தியை காட்டி மிரட்டி, 3 பெண்களையும்,சேலையால் கட்டிப்போட்டுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து அதற்குள் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் மூகமூடி ஆசாமிகள் 3 பேரும் தப்பிச் சென்று விட்டனர். தப்பிச் செல்லும் போது, அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில், எதிரில் வந்த வாலிபரை சத்தம் போடக்கூடாது என்று, லேசாக கத்தியால் கீறிவிட்டு சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்த பீரோவை திறந்து அதற்குள் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் மூகமூடி ஆசாமிகள் 3 பேரும் தப்பிச் சென்று விட்டனர். தப்பிச் செல்லும் போது, அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில், எதிரில் வந்த வாலிபரை சத்தம் போடக்கூடாது என்று, லேசாக கத்தியால் கீறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரைச் சேர்ந்தவர் டொமோனா உஸ்கி (வயது 27). இவர் சென்னையை சுற்றிப்பார்க்க வந்தார். திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று இரவு 7 மணி அளவில், அவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு கைப்பை வைத்திருந்தார்.
திடீரென்று மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இருவர், ஜப்பான்காரர் கையில் வைத்திருந்த கைப்பையை பறித்துச்சென்று விட்டனர்.
அந்த பையில் 600 அமெரிக்க டாலர் நோட்டுகள், கேமரா மற்றும் ஐபேடு கருவி போன்றவைகள் இருந்தன. ஜப்பான்காரர் உடனடியாக இது பற்றி காவல்துறையில் புகார் கொடுத்தார். ஏற்கனவே, பட்டினபாக்கத்தில், ஜப்பான் சுற்றுலா பயணி ஒருவரிடம் இது போல் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல நேற்று இரவு சென்னை அரும்பாக்கத்தில் மலேசிய சுற்றுலாப்பயணி மனோகர் என்பவரிடமும் வழிப்பறிக் கொள்ளை நடந்தது. அவருக்கு உதவி செய்வது போல நடித்த ஆசாமி ஒருவன் அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துச்சென்று விட்டான்.
அந்த பைக்குள்ளும் அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. மனோகர் கைப்பையை பறித்துச்சென்ற ஆசாமியை விரட்டிச் சென்று பிடித்துள்ளார். அந்த ஆசாமி, மனோகரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
அப்போது அந்த வழியாக வந்த ரோந்து காவல்துறையினர் தப்பி ஓடிய கொள்ளை ஆசாமியை மடக்கி பிடித்தனர். அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கத்தி குத்தில் காயமடைந்த மலேசிய சுற்றுலாப்பயணி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

0 comments :
Post a Comment