கல்வி சுற்று நிரூபங்களை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே. றம்ழரன் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளைஎவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கானதொருகல்விச் சுற்று நிரூபத்தினை கல்வியமைச்சு ஒவ்வொரு பாடசாலை அதிபர்களுக்கும் காலத்திற்கு காலம் அனுப்பி வைத்து வருகின்றது.
அதில் ஒரு பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் மாணவர்கள் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதனை மீறி பாடசாலை மாணவியின் பர்தா மற்றும் நீள காற்சட்டை போன்ற வற்றை கழட்ட வைத்த காலில் விழுந்து வணங்க வைத்த கொழும்பு இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தின் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறித்த பாடசாலையின் மாணவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எத்தனையாம் ஆண்டு கல்வி சுற்று நிரூபத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை அதிபர் தெரிவிக்க வேண்டும்பாடசாலையின் விடயத்தில் சுற்று நிரூபத்தினை மீறி சிறுவர் உரிமைக்குமதிப்பளிக்காமல் ஒரு சிறுமியான பாடசாலை மாணவியை உளரீதியான பாதிப்பை ஏட்படுத்தியுள்ளஅதிபருக்கு எதிராக சம்மந்தப்பட்டசிறுமியின் பெற்றோர்கள்சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் அமைப்புக்களில் முறையிட்டு இவ்வாரான அதிபரைஅதிபர் பதவியிலிருந்து நீக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாரான சிறு சிறு இன ரீதியான முரண்பாடுகளை அதிபர்கள் ஆசிரியர்கள் உடன் கைவிட வேண்டும் அதிபர்கள் தாங்கள் விரும்பியபடி செயற்பட முடியுமாக இருந்தால் இந்த நாட்டில் ஒரு கல்வியமைச்சரும் அதன் கல்வி சுற்று நிரூபங்களும் தேவையில்லை அதே போன்று சிறுவர் சட்டங்களும் அதனை செயற்படுத்தும் அமைப்புக்களும் அவசியமில்லை.
இவ்வாரான விடயங்களை அதிபர்கள் எதிர் காலத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்இதனை தடுத்து நிறுத்தகல்வியமைச்சும் அதிகாரிகளும் முன்வர வேண்டும் குறித்த இவ்வாரான சிறு சிறு இவ்விடயங்கள் உடன் உரிய முறையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.தவறும் பட்சத்தில் கடந்த கால பள்ளிவாயல்கள் உடைப்பு,கலாச்சார ஆடை அணியத்தடை, பாங்கு சொல்லத்தடை, மாடு அறுப்பதற்கு தடை, எனபல்வேறு விடயங்கள் விஸ்வரூபம் எடுத்தது போன்று இப் பாடசாலை விடயமும் திட்டமிட்ட வகையில்பல பாடசாலைகளில் விஸ்வரூபம் எடுக்கும்அப்போது இன்று எமது பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகின்ற போது எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாது வேடிக்கை பார்த்தோமோ அதே போன்று இப்பாடசாலைகள் விடயத்தினையும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக இருக்க வேண்டிவரும் எனவே முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகள் இது விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டுஎதிர் காலத்தில் இவ்வாரான விடயங்கள் இடம்பெறாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தரிக்கப்படும் அபாயம் தோன்றும் கடந்த கால பள்ளிவாயல் உடைப்பு போன்று உரியவர்கள் வர்கள் அதன் அடிப்படையில் அல்லது அதன் வழிகாட்டலில் அதற்கானதொரு கல்வி சுற்று நிரூபத்தினை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது விடயத்த
.jpg)
0 comments :
Post a Comment