உம்ராவில் இருந்து திரும்பும் வழியில் விபத்து. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வபாத்தனார்கள்.

வூதி தலைநகர் ரியாத் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக வபாத்தானார்கள்.

மக்காவிற்கு புனிதப் பயணம் 'உம்ரா' மேற்கொண்டு விட்டு திங்கள் கிழமை காலை, காரில் ரியாத் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்த போது முஜம்மியா என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் அந்த வாகனத்தில் பயணித்தனர்.

படுகாயமுற்ற மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட தூர பயணம் என்பதால் வாகனம் ஓட்டும் போது மயக்கம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

எனினும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :