எம்.பைஷல் இஸ்மாயில்-
சகவாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான மத்திய நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இன்று (17) நடைபெற்றது. பிரஜைகள் சமூக அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான எம்.அன்வர் நெளஷாட் தலைமையில்இடம்பெற்ற இந் நிகழ்வின் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அண்சில் மற்றும் பிரதேச சபையும் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியை பார்வையிட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அண்சில் மற்றும் பிரதேச சபையும் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் அங்கு வைக்கப்பட்ட அமைப்பின் குறிப்புப் புத்தகத்தில் ஒப்பமிட்டனர்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில் போன்ற பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் இப்புகைப்படக் கண்காட்சியை பார்வையிட வந்தமையும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment