பர்தா,காற்சட்டையை கழற்றி அதிபரை வணங்க உத்தரவு - கொழும்பில் முஸ்லிம் மாணவிக்கு அராஜகம்



அஷ்ரப். ஏ. சமத்-

ராஜகிரியையில் உள்ள ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தில் சிங்களமொழி முலம் கல்வி கற்கும் 7 ஆம் வகுப்பு முஸ்லீம் மாணவியின் தலையை மூடி அணிந்திருந்த பர்தாவையும், காற்சட்டையும் அதிபர் அறையிற்கு அழைத்து கழற்றச் சொல்லிஉள்ளார். அதன்பின்னர் பெண் அதிபரை வணங்கும் படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இப் பாடசாலையின் ஆசிரியர்கள; அதிபரினால் ஏற்கனவே இம் மாணவிக்கு பல முறை பர்தாவை கழற்றச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கபட்டு வந்துள்ளது. இம் மாணவி முடியாது எனச் சொல்லி வந்திருக்கிறார். அதன் பின் இம் மாணவியின் தாய் ஆளுணர் அலவி மொலானாவின் கவணத்திற்கு கொண்டு வந்திருந்தார். அதன் பின் இத் தாய் மேல்மாகாண கல்வியமைச்சிக்குச் சென்று அதிகாரிகளை சொல்லி எழுத்து முலம் இனங்களது உரிமை மற்றும் அம் மாணவி முஸ்லீமாக உள்ளபடியால் அவரது மத அடிப்படையில் உடையணிய விடுமாறும் அதிபருக்கு எழுத்து முலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடிரெண இம் மாணவிக்கு நேற்று இச் சம்பவம் நடைபெற்றள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக கோட்டை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஜாகிரின் ஹாஜியின் கவணத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இந் நிகழ்வு தேசிய அசெம்பிளியின் வை. எம். எம். ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைனின் கவணத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இச் சம்பவத்தினை அஸ்ரப் ஹூசைன் பாதுகாப்பபு அமைச்சில் இச் சம்பவங்களை கவணிக்கவென உள்ள உளவுதுறை முஸ்லிம் அதிகாரி முஹமட்டின்; கவணத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனல் இந் சம்பவம் பற்றி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி இம் மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு தகவல் வழங்க தாங்கள் விரும்பவில்லையென தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :